தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2024 நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் அறிக்கையில் இடம் பெற உள்ள முக்கிய விபரங்கள் என்ன? - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

Kharge to chair Congress 2024 manifesto panel meet: சாதி வாரிய கணக்கெடுப்பு என்பது எங்களுக்கு அரசியல் கருவி அல்ல, இது சமூகத்தில் உள்ள அனைவரும் சமமான உரிமையை வழங்குவதாகும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டிஎஸ் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

Congress chief Kharge
மல்லிகார்ஜுன் கார்கே

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 7:19 PM IST

டெல்லி:2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தலைவராக முன்னாள் நிதியமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் நிர்வாகியான ப.சிதம்பரத்தை நியமிக்கப்பட்டுள்ளதாகவும். இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் அறிக்கை கமிட்டி ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.சிங் தியோ, ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “2024 நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறவுள்ள முதல் தேர்தல் அறிக்கை கூட்டத்திற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமை தாங்குவார்.

இக்கூட்டத்தில், சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்துதல், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு, இந்திய எல்லையில் சீனா ஊடுருவல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவுள்ளோம். சாதி வாரிய கணக்கெடுப்பு என்பது எங்களுக்கு அரசியல் கருவி அல்ல, இது சமூகத்தில் உள்ள அனைவரும் சமமான உரிமையை வழங்குவதாகும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தைப் பொறுத்த வரையில், 2029ஆம் ஆண்டுக்கு முன் அமல்படுத்தப்படாத சட்டத்தை இயற்றியதன் மூலம், நாட்டின் பெண் வாக்காளர்களை மோடி அரசு வஞ்சித்துள்ளது. 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் பொருந்தியிருக்க வேண்டும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பிரியங்கா காந்தி வதேரா உறுப்பினராகவும் உள்ளனர். இந்த குழு பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் பெண்களுக்கான அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும்.

பொருளாதாரம் என்பது அனைத்திற்கு அடிப்படை காரணியாகும், காங்கிரஸ் கட்சி உருவாக்கும் தேர்தல் அறிக்கை 2024ஆம் ஆண்டு மட்டுமின்றி அதற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். கட்சியின் உள் விவகாரங்களின்படி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்லும் அதே வேளையில், இந்தியக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஒரு தனித் திட்டம் வகுக்கப்படும்.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிக்கைக்காக மக்களின் கருத்துக்களைப் பெற காங்கிரஸ் விரிவான பயிற்சியை மேற்கொண்டிருந்தாலும், இந்த முறை குறுகிய காலம் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக கட்சி வெளியிடும் அறிக்கையிலிருந்து மக்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது குறித்து இணையதளத்தில் கருத்துகள் கேட்கப்படும் அல்லது ஆலோசனை மையங்கள் அமைத்து கருத்துகள் கேட்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜப்பானை தாக்கியது சுனாமி - அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதி

ABOUT THE AUTHOR

...view details