சண்டிகர்: கனடா நாட்டில், காலிஸ்தான் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான ஹர்தீப் சிங் நிஜ்ஹார், மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இதன் பின்னணியில் தனிப்பட்ட முன்விரோதம் அல்லது பழைய பகை உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இவர், காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் என்ற அமைப்பின் தலைவராக உள்ள நிலையில், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிஜ்ஹார், நீண்டகாலமாக, கனடா நாட்டில், காலிஸ்தான் அமைப்பின் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா நகரத்தின் சர்ரே பகுதியில் உள்ள குரு நானக் சீக் குருத்வாரா பகுதியில், துப்பாக்கி ஏந்திய 2 மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். நிஜ்ஹார், அந்த குருத்வாரா சாஹிப் அமைப்பின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிஜ்ஹார், தற்போது படுகொலை செய்யப்பட்டு உள்ள நிலையில், கடந்த காலங்களில், பல்வேறு சர்வதேச நாடுகளில் காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை எத்தனை காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர், தடை செய்யப்பட்ட அமைப்பை நடத்துவதில் அவர்களுக்கு எவ்வளவு ஈடுபாடு இருந்தது என்பதை விளக்கமாக காண்போம்....
ஹர்மீத் சிங் (என்கிற) ஹேப்பி: காலிஸ்தான் விடுதலைப் படையின் (KLF) தலைமைப் பொறுப்பு வகித்த பயங்கரவாதி ஹர்மீத் சிங், 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 28ஆம் தேதி, பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டன.. ஹர்மீத் சிங் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து விடுவார்களோ என, இந்திய உளவுத்துறை அமைப்புகள் சந்தேகித்தன. கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில், இந்து தலைவர்களை குறிவைத்து கொலை செய்தது உள்ளிட்ட முக்கிய சம்பவங்களில் ஹர்மீத் சிங் ஈடுபட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் செஹர்டா பகுதியை சேர்ந்த ஹர்மீத் சிங், காலிஸ்தான் அமைப்பின் கொள்கைகளால் கவரப்பட்டு, 2008ஆம் ஆண்டில், பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் விடுதலைப் படை(KLF) உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 2009 ஆம் ஆண்டில், அவர் பாகிஸ்தானில் இருந்து ஒரு ஆயுதங்களை ஆர்டர் செய்து இருந்தார். பின்னர் அவர், நேபாள நாட்டின் வழியாக, பாகிஸ்தான் சென்றார். அதன் பிறகு, அவர் இந்தியா திரும்பவே இல்லை.
கடந்த 11 ஆண்டுகளில், அவர் தலைமையில், பாகிஸ்தானில் இருந்து 10 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.. 2014ஆம் ஆண்டில், காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் ஹர்மிந்தர் மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், , ஹர்மீத் சிங் KLF அமைப்பின் தலைவர் ஆனார். இதனையடுத்து, தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்தன. இந்நிலையில், . இங்கிலாந்தில் உள்ள குர்ஷரன்வீர் மற்றும் இத்தாலியில் உள்ள குர்ஜிந்தர் உள்ளிட்டோர் அளித்த நிதியுதவியில், ஹர்மீத் சிங், பஞ்சாப் மாநிலத்தில், கடத்தல்காரர்கள், குண்டர்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவு இளைஞர்களின் மூலம் புதிய பயங்கரவாத பிரிவுகளை தொடர்ந்து நிறுவி வந்தார்.
அவதார் சிங் கந்தா: 1988ஆம் ஆண்டில் ரோட் கிராமத்தில் பிறந்த அவதார் சிங் கந்தா, மோகா மாவட்டத்தில் வசித்து வந்தார். அவதார் சிங் கந்தா, காலிஸ்தான் விடுதலைப் படைத் தலைவர் குல்வந்த் சிங் குக்ரானாவின் மகன் ஆவார்.. தந்தையின் பெயர் காலிஸ்தானி இயக்கத்துடன் தொடர்புடையது என்பதால், பாதுகாப்பு அமைப்புகள் அடிக்கடி அவதாரின் வீட்டிற்கு விசாரணைக்கு வந்த வண்ணம் இருந்தன. இதன்காரணமாக, பஞ்சாப் மாநிலத்தில், அவரது குடும்பத்தினர் ஒரே இடத்தில் வசிக்க முடியவில்லை.