தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 20, 2021, 8:22 AM IST

ETV Bharat / bharat

கேரளாவின் முதல் 24 மணிநேர தடுப்பூசி மையம் திறப்பு!

கரோனா தொற்று அதிகமாகக் கண்டறிப்படும் கேரளாவில் முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையம் நேற்று (ஆக. 19) திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

24 மணிநேர தடுப்பூசி மையம் திறப்பு, திருவனந்தபுரம், thiruvanthapuram
24 மணிநேர தடுப்பூசி மையம் திறப்பு

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கு சமீபத்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இது வயதானவர்களை விட இளைஞர்களையே அதிகம் பாதிக்கிறது. 20 முதல் 30 வயதிற்கு உள்பட்டவர்களுக்குதான் மீண்டும் தொற்று ஏற்படுகிறது என அம்மாநில சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.

ஓணம் விடுமுறையிலும் இயங்கும்

இந்நிலையில், கேரளாவின் 24 மணிநேரம் இயங்கும் (Drive through) தடுப்பூசி மையம் நேற்று (ஆக.19) திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் திறக்கப்பட்டது. இந்த மையம் ஓணம் விடுமுறை உள்பட எல்லா தினங்களிலும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் அம்மாநில அரசு இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

இந்த வசதி, வாகனங்களில் பயணிக்கும் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தும் இங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கேரளாவில் நேற்று முன்தினம் (ஆக.18) 21,427 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தொற்று எண்ணிக்கை 7,25,005ஆக உள்ளது. மேலும், அன்றைய தினம் 179 இறப்புகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பி.டி., உஷா பயிற்சியாளர் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details