கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷபியா ஹாரிஸ் , மிஷா சித்திக் என்ற இரு பெண்களை தேசிய புலனாய்வு முகமை இன்று (ஆகஸ்ட் 17) கைது செய்துள்ளது.
இவர்கள் இருவரும் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களை கண்காணிக்கும் என்.ஐ.ஏ
சமூக வலைதளங்களில் 'தி க்ரானிக்கல் பவுண்டேஷன்' என்ற குழுவை உருவாக்கி ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான கருத்துகளை அதில் இருவரும் பகிர்ந்து வந்துள்ளனர்.
இந்த இருவரையும் மார்ச் மாதம் முதல் தேசிய புலனாய்வு முகமை கண்காணித்து வந்துள்ளதாகவும், இவருடன் தொடர்புடைய அமீர் அப்துல் ரஹ்மான் என்ற நபரை மங்களூருவில் ஆகஸ்ட் 4ஆம் தேதி கைது செய்ததாகவும் தெரிகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் முசாத் அன்வர் என்ற நபரையும் என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபன் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில், அந்த அமைப்புக்கு ஆதரவாக, சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிடும் நபர்களை தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக கண்காணித்துவருகிறது.
இதையும் படிங்க:பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்!