ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரண்டாம் எலிசபெத் மகாராணியிடமிருந்து மாணவிகளுக்கு கிடைத்த கடிதம் - எலிசபெத் மகாராணியிடமிருந்து மாணவிகளுக்கு கிடைத்த கடிதம்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரட்டை சகோதரிகளுக்கு இங்கிலாந்திலுள்ள பக்கிங்காம் அரண்மனையில் உள்ள இரண்டாம் மகாராணியிடம் இருந்து கடிதம் வந்ததையடுத்து அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியிடமிருந்து மாணவிகளுக்கு கிடைத்த கடிதம்
இரண்டாம் எலிசபெத் மகாராணியிடமிருந்து மாணவிகளுக்கு கிடைத்த கடிதம்
author img

By

Published : May 4, 2021, 9:56 AM IST

கேரளாவில் ஆறாம் வகுப்பு படித்து வரும் இரட்டை சகோதரிகள் இங்கிலாந்தில் உள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில் ராணியை கேரளாவுக்கு வருகை புரியுமாறு கேட்டிருந்தனர். மேலும் லண்டனுக்கு செல்ல தாங்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அந்தக் கடிதத்துடன் பூரம் பண்டிகையின் புகைப்படத்தையும் ஆலப்புழா கழிமுகத்தின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியிருந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு பிரிட்டிஷ் மன்னரிடமிருந்து வின்ஸ்டர் கோட்டையின் சீல் பதித்த கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதத்தில் இரண்டாம் மகாராணி எலிசபெத், இரு சகோதரிகளின் நேர்த்தியாக எழுதப்பட்ட கடிதத்துக்காகவும், அவர்கள் வரைந்த அழகான படங்களுக்காகவும் பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும் அவர்கள் கேட்பதை செய்ய முடியாவிட்டாலும் தற்போதுள்ள தொற்று காலத்தில் இரு சகோதரிகளும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டிருந்தார். 2021ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்றதை அடுத்து இரண்டு சகோதரிகளும் தாங்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். இவர்கள் அவர்கள் வரைந்த ஓவியத்திற்கு ஆகவும் படங்களுக்காகவும் பல பரிசுப் பொருட்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'மறைக்கப்படும் கரோனா மரணங்கள்' - மத்தியப் பிரதேச அரசின் அலட்சியம்

ABOUT THE AUTHOR

...view details