தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு - பிளஸ் 1 தேர்வு அட்டவணை வெளியீடு

முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பள்ளிகள் திறப்பு
கேரளாவில் பள்ளிகள் திறப்பு

By

Published : Sep 19, 2021, 4:39 PM IST

Updated : Sep 19, 2021, 6:23 PM IST

திருவனந்தபுரம்: இந்தியாவில் அதிகம் கரோனா பரவும் மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தினசரி பாதிப்பு 30 ஆயிரம் எனப் பதிவாகி வந்தது. இந்நிலையில் அரசின் தீவிர நடவடிக்கையால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

கரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று (செப்.18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 தேர்வு அட்டவணை வெளியீடு

முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு முறையே தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வுகளை பள்ளிகளில் (offline mode) நடத்த கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 18 வரை பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சாகித்ய அகாதமி விருது பெறுபவர்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

Last Updated : Sep 19, 2021, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details