தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் அமைச்சர்கள் மீது பாலியல் புகார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஸ்வப்னா சுரேஷ் - sexual misconduct

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் முன்னாள் அமைச்சர்கள் மீது பாலியல் புகார்
கேரளாவில் முன்னாள் அமைச்சர்கள் மீது பாலியல் புகார்

By

Published : Oct 22, 2022, 4:33 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், மூன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒரு முன்னணி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது ஸ்வப்னா சுரேஷ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் முன்னாள் சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் தனக்கு பாலியல் இச்சைகளை தூண்டும் வகையில் மோசமான மெசேஜுகளை அனுப்பினர் என்றும், முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அவரை மூணாறு மலைப்பகுதிக்கு சுற்றுலாவிற்கு அழைத்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக தங்க கடத்தலில் தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளது என கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிதாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் மீது பாலியல் புகார் கூறி கேரளாவில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஸ்வப்னா.

இதையும் படிங்க:தெலங்கானாவில் பாலியல் வழக்கில் சிக்கிய பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து

ABOUT THE AUTHOR

...view details