திருவனந்தபுரம் : கேரளாவில் வெட்டிங் போட்டோஷூட் மீது அதீத மோகம் எழுந்துள்ளது. புதுமண தம்பதிகளும் திருமணத்திற்கு முந்தைய போட்டோசூட், பிந்தைய போட்டோசூட் என்று விதவிதமான போட்டோக்களை எடுத்து குவிப்பதும், இந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகள் பெறுவதில் ஆர்வம் காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.
விபரீத வெட்டிங் போட்டோஷூட்:இதற்கேறப் போட்டோகிராபர்களும் தினுசு தினுசான ஐடியாக்களுடன் தம்பதிகளை அணுகிவருகின்றனர். அந்த வகையில் தம்பதிகளை ஆற்றின் நடுவே நிற்கவைத்து போட்டோ எடுப்பது, மலையின் உச்சியில் நிற்க வைத்து போட்டோ எடுப்பது, பைக்குகளில் சாகசம் காட்டும்படி போட்டோ எடுப்பது போன்ற விபரீத வெட்டிங் போட்டோஷூட்கள் நடந்துவருகின்றன.
வாழ்க்கையை பறித்த போட்டோஷூட்: இந்த போட்டோஷூட்கள் அவ்வப்போது சில தம்பதிகளில் வாழ்க்கையை பறித்துவிடும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அப்படி கேரள மாநிலத்தில் திருமணமாகிய ஒரே மாதத்தில் தம்பதிக்கு போட்டோசூட்டின்போது ஏற்பட்ட விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.