திருவனந்தபுரம்: மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபாரதமும் விதித்து மஞ்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஏற்கனவே மற்றொரு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் முன்னதாக, 2014 முதல் 2016ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மனைவியுடன் சண்டையிட்டுவிட்டு, வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் மகள்களிடம் தவறாக நடந்துள்ளார். இதனை தாயாரிடம் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டினார்.