தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள நரபலி சம்பவத்தில் அடுத்தடுத்து பகீர்... உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூரம்... - கொச்சி பெண் நரபலி

கேரள நரபலி சம்பவம் தொடர்பான விசாரணையில், அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நரபலி கொடுத்தவர்களின் உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

kerala
kerala

By

Published : Oct 12, 2022, 3:10 PM IST

Updated : Oct 12, 2022, 3:59 PM IST

கொச்சி: கேரளாவில் பகவந்த் சிங் என்ற மந்திரவாதி, செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, எர்ணாகுளம் மாவட்டம் கடவந்திரா பகுதியைச் சேர்ந்த பத்மா (52), காலடியைச் சேர்ந்த ரோசிலி (50) ஆகிய 2 பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பத்மா என்ற பெண்மணி, தமிழ்நாட்டின் தருமபுரி பகுதியில் வசித்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மந்திரவாதி பகவந்த் சிங், அவரது மனைவி, முகமது ஷாபி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாபி, பகவந்த் சிங்கையும், அவரது மனைவியையும் மூளைச் சலவை செய்து இந்த கொடூரமாக நரபலி செய்ததாகவும், உடலை கூறு போட்டு தனித்தனியாக புதைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பகவந்த்சிங் மற்றும் அவரது மனைவியை, நரபலி நடந்த அவர்களது வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை தாங்கள் சமைத்து சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அவ்வாறு சாப்பிட்டால் ஆயுள் கூடும் என்று முகமது ஷாபி கூறியதால், அவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஷாபி மற்றொரு பெண்ணையும் நரபலி கொடுக்க அழைத்து வந்ததாகவும், அந்த பெண் தனது இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தவுடன் அவர்கள் திட்டத்தை கைவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதேபோல், ஷாபி ஒரு குழந்தையுடன் ஒரு குடும்பத்தையே அழைத்து வந்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கேரளாவில் நடந்த கொடூரமான நரபலி சம்பவம்... உறைய வைக்கும் பின்னணி...!

Last Updated : Oct 12, 2022, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details