எர்ணாகுளம் (கேரளா): தனியார் கனிம நிறுவனம் மற்றும் கேரள முதலமைச்சர் மகளின் ஐடி நிறுவனத்திற்கும் இடையே நடந்த சட்டவிரோத நிதி பரிவர்த்தனை தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மகள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சிறப்பு லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, என்.வி.ராஜீ, வழக்கி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சமூக ஆர்வலர் கிரீஷ்பாபு மூவாற்றுப்புழை சிறப்பு லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமனறத்தில் மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
அதில், "சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளது. கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூட்டில் லிமிடெட் மூலம் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கேரளா முதலமைச்சர் விஜயன், அவரது மகள் வீணா, மாநில சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களான பி.கே.குஞ்சாலிக்குட்டி, வி.கே.இப்ராகிம்குஞ்சு, வீணாவின் ஐ.டி நிறுவனம் மற்றும் கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூட்டில் லிமிடெட் ஆகியோர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும்.