தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராணுவ வீரர்களுக்கு திருமண அழைப்பிதழ் - வைரலாகும் கேரள ஜோடி... - திருமண அழைப்பிதழ்

கேரளாவில் தங்களது திருமணத்திற்கு வருமாறு ராணுவ வீரர்களுக்கு கைப்பட எழுதிய கடிதத்துடன் தம்பதி அழைப்பிதழ் அனுப்பிய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கேரள தம்பதியின் திருமண அழைப்பிதழ்
கேரள தம்பதியின் திருமண அழைப்பிதழ்

By

Published : Nov 22, 2022, 11:15 AM IST

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராகுல், கோவையில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மென்பொருள் நிறுவன ஊழியர் கார்த்திகாவுக்கும் கடந்த 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு உறவினர்களை அழைப்பது போல், ராணுவ வீரர்களையும் தம்பதி கடிதம் அனுப்பி அழைப்பு விடுத்துள்ளனர்.

கடிதத்தில், நாட்டின் மீதுள்ள அன்பு, உறுதிப்பாடு மற்றும் தேசபக்திக்கு உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும், எங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நன்றிக் கடன்பட்டு இருப்பதாகவும், உங்களால் நிம்மதியாக உறங்குவதாகவும், மகிழ்ச்சியான நாட்களை கொடுத்த வீரர்கள் அனைவரும் தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ராகுல் - கார்த்திகா தம்பதி கடிதம் எழுதி அருகில் உள்ள ராணுவ தளத்திற்கு திருமண அழைப்பிதழை அனுப்பினர்.

ராகுல் - கர்த்திகா திருமணத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் இந்திய ராணும் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், வாழ்த்துகள், ராகுல் கார்த்திகா தம்பதியை இந்திய ராணுவம் மனமார வாழ்த்துவதாகவும், திருமணத்திற்கு அழைத்ததற்கு நன்றி என்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை பெற் ஜோடியை வாழ்த்துவதாக கூறப்பட்டுள்ளது.

ராணுவ முகாமின் கமாண்டர் பிரிகேடியர் லலித் சர்மா திருமண ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் பூங்கொத்து வழங்கி திருமண ஜோடியை வாழ்த்தினார்.

இதையும் படிங்க:Google Pay, PhonePe-யில் விரைவில் பரிவர்த்தனை உச்ச வரம்பு - NPCI திட்டம்

ABOUT THE AUTHOR

...view details