தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தங்கக் கடத்தல் வழக்கு: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சி.எம்.ரவீந்திரன் - ஸ்வப்னா சுரேஷ்

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம். ரவீந்திரன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Kerala CM's close aide in hospital after ED's Nov 27 summons
தங்கக் கடத்தல் வழக்கு : அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சி.எம்.ரவீந்திரன் !

By

Published : Nov 25, 2020, 9:35 PM IST

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி 30 கிலோ எடையுள்ள சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல்செய்தது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், பாசில் ஃபரீத் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலருடன் மூத்த ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர், ஐ.டி. செயலர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சிவசங்கரை, தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்து விசாரணை செய்துவருகிறது.

அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகின. அதில், இந்தக் கடத்தலில் பினராயி விஜயனின் கூடுதல் தனிச்செயலர் ரவீந்திரனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், சி.எம். ரவீந்திரனுக்கும் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (நவ. 25) அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், கொச்சியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தில் நவ. 27ஆம் தேதியன்று நடைபெறவிருந்த விசாரணைக்கு அவர் நேரில் முன்னிலையாக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரவீந்திரன், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்துவரும் கொடியேறி பாலகிருஷ்ணனின் உதவியாளராகப் பணிபுரிந்தவர் என்பதும், 2016ஆம் ஆண்டில் விஜயன் முதலமைச்சராகப் பதவியேற்ற பின் அரசின் அதிகாரப் பீடத்துக்கு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணையில், கொச்சியில் உள்ள அலுவலகத்தில் நாளை (நவ. 26) முன்னிலையாகுமாறு தகவல் கூறப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலர் சிவசங்கர் அளித்த தரவுகளின் அடிப்படையில், ரவீந்திரனுக்கு இந்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சிவசங்கர் கடந்த வாரம், தங்கக் கடத்தல் வழக்கில் பணமோசடி செய்ததாக கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் விசாரணையில், அமலாக்கத் துறை இயக்குநரகம் வேறு சில துறைகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கு: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சி.எம். ரவீந்திரன்

இது குறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறுகையில், “பினராயி விஜயனின் கூடுதல் தனிச்செயலர் ரவீந்திரன், தங்கக்கடத்தல் வழக்கிலும் ஈடுபட்டுள்ளார்” எனப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க :கேரள முதலமைச்சரின் கூடுதல் தனிச்செயலருக்கு அழைப்பாணை!

ABOUT THE AUTHOR

...view details