தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இவர்களுக்கு இலவச கரோனா சிகிச்சை கிடையாது - பினராயி விஜயன் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு இலவச கரோனா சிகிச்சை கிடையாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

kerala-cm-vijayan-says-no-free-covid-treatment-for-unvaccinated
kerala-cm-vijayan-says-no-free-covid-treatment-for-unvaccinated

By

Published : Dec 1, 2021, 11:49 AM IST

திருவனந்தபுரம் :நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. எனினும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று (நவ.30) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பினராயி விஜயன், ”கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் வாரம் ஒருமுறை சொந்த செலவில் கரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற்று தலைமை ஆசிரியர்களிடம் அளிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு அரசின் இலவச மருத்துவ சிகிச்சை கிடையாது”எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்ளுமா கோவாக்சின்?

ABOUT THE AUTHOR

...view details