திருவனந்தபுரம் (கேரளா): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் மறைவுக்கு கேரள முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்கள் உரிமைகளுக்காவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் இருந்தவர், மைதிலி. கம்யூனிஸ்ட் கட்சியில் அவரது பங்கு அளப்பரியது. அவரின் மறைவு கட்சிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்" என்று பதிவிட்டுள்ளார்.