தமிழ்நாட்டைப் போலவே, கேரள மாநிலத்திலும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்பு மனு தாக்கல் செய்தார் கேரள முதலமைச்சர்! - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: தர்மடம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று(மார்ச்.15) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்தார் கேரள முதலமைச்சர்
இதற்கான வேட்பு மனுவை கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று காலை 11 மணியளவில் பினராயி தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவர், முகக் கவசம் அணிந்து கரோனா விதிமுறைகளை பின்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேர்தல் 2021: கவர்ச்சி அறிவிப்புகள் - பெண்களுக்கு வரமா, பாரமா?