ஐந்து மாநிலங்களில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவானது இன்று நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், கேரளாவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் கருத்துக்கணிப்புகளின் மூலம் பதில் அளித்துள்ளது.
கேரளாவில் கெத்து காட்டும் பினராயி...கருத்துக்கணிப்பு முடிவுகள் அவுட்! - தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு
டெல்லி: கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு
140 தொகுதிகளை கொண்ட கேரளா சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. கேரள சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவுபெறுகிறது.
ரிபப்ளிக் தொலைக்காட்சி, இந்தியா டூடே ஆகிய தொலைக்காட்சிகள் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.