தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் நிபா: கேரளாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு

By

Published : Sep 5, 2021, 10:35 AM IST

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (செப். 5) காலை உயிரிழந்தான்.

நிபா வைரஸ் தொற்று
நிபா வைரஸ் தொற்று

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நிஃபா வைரஸ் தொற்று ஏற்பட்டு மாநில முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அப்போது கோழிக்கோட்டில்தான், தென்னிந்தியாவில் முதன்முதலாக நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதே மாவட்டத்தில் 12 வயது சிறுவன், நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் நேற்று (செப். 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அச்சிறுவன் இன்று (செப். 5) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். ஆனால், சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாக தற்போது வரை அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சிறுவன் நிபா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில், மூத்த மருத்துவத்துறை அரசு அலுவலர்களுக்கு இடையிலான அவசர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. மேலும், அச்சிறுவன் உடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து, அவர்கள் தனிமைப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.

தற்போது, அச்சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இன்று கோழிக்கோடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details