தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 47 கட்சித் தலைவர்களுக்கு கவிதா கடிதம்!

kcr daughter kavitha: கட்சி வேறுபாடுகளைக் கடந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற ஒன்றிணைய வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 47 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பிஆர்எஸ் கட்சியின் நியமன உறுப்பினர் கவிதா கடிதம் எழுதியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 3:50 PM IST

தெலங்கானா:அரசியல் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு பெண்களுக்கான முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிஆர்எஸ் கட்சியின் நியமன உறுப்பினர் கவிதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 47 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ள அவர், அந்த கடிதத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பாலின வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைக்கும் நிர்வாகத்திற்கான முதல் படியாகவே இதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த மசோதா இன்று வரை நிறைவேற்றப்படாமல் கிடப்பில்போடப்பட்டுள்ள நிலையில் அதை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் வகிக்கும் பொறுப்புகள் மற்றும் சட்டமன்ற அமைப்புகளின் அவர்களது பிரதிநிதித்துவத்தின் அழுத்தம் குறித்து அடிக்கோடிட்டுக் காட்டியுள்ள கவிதா, தங்களைப் பொதுவாழ்வில் இணைத்துக்கொண்ட சுமார் 14 லட்சம் பெண்களின் கருத்துக்களையும் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார்.

33 சதவீத இட ஒதுக்கீட்டில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிப்பது தனித்துவம் வாய்ந்தது அல்ல எனக் குறிப்பிட்டுள்ள கவிதா, இது ஆண், பெண் இரு பாலரும் சமமானவர்கள் என்ற நிலையைத்தான் உருவாக்கும் எனவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல், பாரதிய ஜனதா தலைவர் ஜேபி நட்டா, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், என்சிபியின் சரத்பவார், காங்கிரஸின் மல்லிகார்ஜுன் கார்கே, ஒய்எஸ்ஆர்சிபியின் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் கேசிஆர் மகள் உள்ளிட்ட சுமார் 47 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தனித்தனியாகக் கடிதம் எழுதியுள்ள அவர், இந்த விவகாரத்தில் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை ஓரம் கட்டிவிட்டு ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்களில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்துத் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என எனது இருகரங்களைக் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதா, மாநிலங்களவையில் 2010ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மக்களவையில் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது எனவும் இதை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கவிதா வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக இந்த மசோதாவை நிறைவேற்றக் கடந்த மார்ச் மாதம் கவிதா உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி இந்த மசோதாவை நிறைவேற்ற இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் கோரி வருகிறார் கவிதா.

இதையும் படிங்க:"பாரத் குடியரசுத் தலைவர் - மாநிலங்களின் ஒன்றியத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்" - காங்கிரஸ் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details