தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் தீவிரவாதிகளால் பண்டிட்  சுட்டுக்கொலை - kashmiri pandit shot dead by terrorists in jammu government office

ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் பண்டிட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பண்டிட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

By

Published : May 13, 2022, 8:30 AM IST

Updated : May 13, 2022, 9:16 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டம் சடூரா பகுதியில் தாலுகா அலுவலகம் உள்ளது. நேற்று (மே.12) பிற்பகலில் இரண்டு தீவிரவாதிகள் இந்த அலுவலத்தினுள் புகுந்து ராகுல் பட் என்ற அரசு ஊழியரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இதில் படுகாயம் அடைந்த ராகுல் பட், ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையின்போது சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

இந்த அரசு ஊழியர் காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர். ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ராய்பூர் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் பலி

Last Updated : May 13, 2022, 9:16 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details