பெங்களூரு:கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர் பாஜக மாவட்ட இளைஞரணியில் முக்கிய பொறுப்பை வகித்துவந்தார். இந்த நிலையில் ஜூலை 26ஆம் தேதி இரவு அவரை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அரிவாள் தாக்கி கொலை செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது - கர்நாடக பாஜக பிரமுகர் கொலை
கர்நாடகாவில் பாஜக இளைஞரணி பிரமுகர் கொலை வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 19 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
karnataka-two-held-19-detained-in-bjp-yuva-morcha-leaders-murder
இதனால் கொலைக்கு காரணமானவர்கள் பிடிக்க மாநில காவல்துறை தனிப்படைகள் அமைத்துள்ளது. சந்தேகிக்கப்படும் 21 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்துள்ளார். இருவரும் பெல்லாரேவை சேர்ந்த ஜாகிர் மற்றும் சவனூரை சேர்ந்த முஹம்மது ஷபிக் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கீழச்சேரி பள்ளியில் மாணவி தற்கொலை;தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் விசாரணை