தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆயுதப்படை காவலர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு - கர்நாடக அரசு அறிவிப்பு! - திருநம்பி

கர்நாடகாவில் ஆயுதப்படை காவலர் தேர்வில், முதல்முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 13, 2022, 10:31 PM IST

பெங்களூரு: கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கர்நாடகாவில் காலியாக உள்ள 3,484 ஆயுதப்படை காவலர் பணியிடங்களை நிரப்பும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில் முதல்முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 3,484 பணியிடங்களில் 79 பணியிடங்கள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (male third gender) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்யாண் கர்நாடகா பகுதி 420 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 11 பணியிடங்கள் மூன்றாம் பாலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், அமைச்சர் male third gender என்று குறிப்பிட்டுள்ளது சரியான பதம் இல்லை என்றும், அவர் திருநம்பிகளைத்தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று கருதுவதாகவும் கொயர் ஆர்வலர் (queer activist) ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கணித தேர்வுக்கு பயந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன்

ABOUT THE AUTHOR

...view details