பெங்களூரு: கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில், கர்நாடகாவைச் சேர்ந்த பள்ளி நண்பர்களான சிறுவனும், சிறுமியும் காதலித்து, பிறகு திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறினர். சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இருவரையும் பிடித்த போலீசார், சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே சிறுமியும் சிறுவனும் 18 வயதை கடந்துவிட்டதாக தெரிகிறது.
அறியாத வயசு..! - போக்சோவை ரத்து செய்த நீதிமன்றம் - காதலித்து ஊரைவிட்டு ஓடிய சிறுவன் சிறுமி
இருதரப்பினரும் சமரசம் ஆகிவிட்டதால், இளைஞர் மைனராக இருந்தபோது அவர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இளைஞர் மீதான போக்சோ சட்டத்தை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இரண்டு குடும்பங்களும் சமரசம் ஆகிவிட்டதால், வழக்கை தொடர விரும்பவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதி, இருவரும் விரும்பியே உடலுறவில் ஈடுபட்டுள்ளதால், இது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வராது என தெரிவித்தார். இதையடுத்து இளைஞர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், காதலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு இருப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொல்கத்தா காதல் ஜோடி தற்கொலை வழக்கில் திடீர் ட்விஸ்ட்; பகீர் பின்னணி - 2 பேர் கைது