தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அச்சுறுத்தும் ’ஒமைக்ரான்’... கரோனா மூன்றாவது அலைத் தடுக்க கர்நாடக அரசு தீவிரம் - லேட்டஸ்ட் நியூஸ்

கர்நாடகாவில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுக்காதவர்களைக் கண்டறிந்து, அவர்களை விரைவில் தடுப்பூசி போட செய்வதற்கு தீவிரப் பரப்புரையில் ஈடுபடுமாறு அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

By

Published : Nov 28, 2021, 6:38 PM IST

பெங்களூரு : நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்புகள் இன்னும் குறையாமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து உலகம் முழுவதும் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

புதுவகை கரோனா

டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்து உருமாறிய வைரஸ்கள் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ‘ஒமைக்ரான்’ என்ற உருமாறிய புதிய வகை கரோனா வைரஸ், உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா வழக்குகள், புதிய ஒமைக்ரான் வைரஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கர்நாடகா முடிவு செய்துள்ளது.

கர்நாடகா அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இது தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று (நவ.28) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், விமான நிலையங்களில் சர்வதேசப் பயணிகளின் பரிசோதனையை தீவிரப்படுத்துதல், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அறிக்கையை கட்டாயமாக்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுக்காதவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடுவதற்கான தீவிரப் பரப்புரையில் ஈடுபடுமாறும் அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கவும், அரசு அலுவலகங்கள், மால்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், நூலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது குறித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், "கேரளா, மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து மாநிலத்துக்குள் நுழைபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் எதிர்மறை அறிக்கை கட்டாயம்.

மூன்றாவது அலையைத் தடுக்க பூஸ்டர் டோஸ்

மருத்துவர்கள், செவிலியர்கள், சர்வதேசப் பயணிகள் ஆகியோருக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்படும். நேர்மறை சோதனை செய்தவர்களுக்கு நகரங்களுக்குள் நுழைய முடியாது; விமான நிலையங்களில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள். பள்ளிகள், கல்லூரிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்படும்.

மாநிலத்தில் கரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை வழங்க கர்நாடக அரசு தயாராக உள்ளது. இதற்கான அனுமதியை இன்னும் ஒரு வாரத்தில் ஒன்றிய அரசிடமிருந்து பெற்று விடுவோம்" என்றார்.

இதையும் படிங்க:Omicron: தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் தாக்கும் ஒமைக்ரான் வைரஸ்

ABOUT THE AUTHOR

...view details