பெங்களூரு:கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) எண்ணப்பட்டன. இதில் 136 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இத்தேர்தலில் ரேபக் தொகுதியில், தமிழ்நாடு உள்துறைச் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் கணவர், ஷம்பு கல்லோலிகர் போட்டியிட்டார். இவர் தமிழ்நாடு சமூக நலத்துறையில் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். ஓய்வு வயதை நெருங்கிய நிலையில், கர்நாடக மாநிலத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக 58வது வயதில் விருப்ப ஓய்வுபெற்றார். பின்னர் ரேபக் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் அவர் வாய்ப்புகேட்டார். ஆனால் வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேச்சையாக தேர்தலில் களம் இறங்கினார்.