கர்நாடகா: கன்னட மொழியில் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்சித் ஷெட்டி நடிப்பில் வெளியான "சார்லி 777" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனிமையில் வாழும் இளைஞனுக்கும் ஒரு நாயுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியுள்ளது, இப்படம்.
இப்படத்தின் சிறப்புக்காட்சியை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
பொம்மை "சார்லி 777" படம் பார்த்தபோது... அப்போது பேசிய அவர், "படத்தில் ரக்ஷித் சிறப்பாக நடித்துள்ளார். நாயகனுக்கும் நாயிற்கும் இடையிலான பாசப்பிணைப்பு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
பொம்மையின் நாய் இறந்தபோது... இந்தப்படம் நூறு விழுக்காடு உணர்வுகளுடன் ஒன்றிணைக்கும் வகையில் இருந்தது. தூய்மையான அன்பை இந்தப் படம் எடுத்துக் காட்டியது" என்று கூறினார். இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது உணர்ச்சிவசப்பட்ட அவர், இறந்துபோன தனது நாயை இப்படம் நினைவுபடுத்தியதாக கூறி, கண் கலங்கினார். இந்த வீடியோவை படக்குழு ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
"சார்லி 777" படத்தை பார்த்து கண்கலங்கிய பசவராஜ் பொம்மை! இதையும் படிங்க:15 years of Sivaji : ஏவிஎம்-மின் அடுத்த சர்ப்ரைஸ்