பெங்களூரு:கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசவுள்ளார். அதனைத்தொடர்ந்து பல்வேறு ஒன்றிய அமைச்சர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
பிட்காயின் விவகாரம் தொடர்பாகவும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் அப்போது அவர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், "பிட் காயின் விவகாரத்தில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்த தகவல்களை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும். காங்கிரசார் அதில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். இதற்கு ஆட்சேபனை இல்லை. இந்த விஷயத்தில் நாங்களும் குழு அமைத்து விசாரணை நடத்தியுள்ளோம். அதில் கிடைத்துள்ள தகவல்கள் உரிய நேரம் வரும்போது பகிரங்கப்படுத்துவோம்" என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பத்ம விருதுகள் பெற்ற தமிழர்கள்!