தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"தாமரை மலரும்" - உத்தவ் தாக்கரே ராஜினாமாவுக்கு கங்கனா ரனாவத் ரியாக்சன்! - சிவசேனா

உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ள நிலையில், "தாமரை மலரும்" என்ற தலைப்பில் நடிகை கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Kangana
Kangana

By

Published : Jun 30, 2022, 7:03 PM IST

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரே குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். "தீமை தலை தூக்கும்போது, ​​அழிவு உடனடியாக நடக்கும். ஆனால், பிறகு மாற்றம் நடக்கும். தாமரை மலரும்" என்ற தலைப்புடன் ஒரு நிமிட வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

அதில், "ஜனநாயகம் என்பது ஒரு நம்பிக்கை என 2020இல் நான் கூறியிருந்தேன். அதிகாரம் இருக்கிறது என நினைத்து, அந்த நம்பிக்கையை அழிப்பவர்கள் அழிவார்கள். அவர்களின் ஆணவம் தகர்க்கப்படும். ஹனுமான், சிவனின் 12ஆவது அவதாரமாக கருதப்படுகிறார்.

சிவசேனா ஹனுமான் சாலிசாவை தடை செய்ததால், இப்போது ​​சிவனால் கூட அவர்களைக் காப்பாற்ற முடியாது. ஹர ஹர மகாதேவ். ஜெய் ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரா" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா: - நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இல்லை என அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details