டெல்லி :பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் கங்கனா ரனாவத். தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட தலைவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து சந்திரமுகி 2ஆம் பாகம் படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை கதையை பின்னணியாக கொண்ட எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தள்ளிப்போய் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வரும் கங்கனா ரனாவத், பாஜக தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவாக அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்தார்.