கொல்கத்தா(மேற்குவங்கம்): இயக்குநர் லீனா மணிமேகலையின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இந்த போஸ்டரில் காளி வேடமிட்டிருந்த பெண்ணின் கையில் சிகரெட்டும், LGBTQ கொடியும் இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, ‘காளி எனக்கு இறைச்சி உண்ணும், மது அருந்தும் தெய்வம். உங்கள் தெய்வத்தை கற்பனை செய்துகொள்ள உங்களுக்கு சுதந்திரம் உள்ளது' எனக் கூறினார். இவ்வாறு காளி குறித்த அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கு எதிர்ப்பு இதனால் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கைப் பின்தொடர்வதை மஹுவா மொய்த்ரா நிறுத்தியுள்ளார். இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை பின்தொடர்கிறார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மஹுவா மொய்த்ராவின் கருத்துகள் மற்றும் காளி தேவி குறித்த அவரது கருத்துக்கள், அவரது தனிப்பட்ட திறனில் செய்யப்பட்டவை. அவை எந்த வகையிலும் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பவ்பஜார் காவல் நிலையத்தில் பாஜக தொண்டர்கள் கூடி, சர்ச்சைக்குரிய கருத்துக்காக மஹுவா மொய்த்ராவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா - காரணம்?