தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

49ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யூயூ லலித் நியமனம்! - President

உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக, நீதிபதி யூயூ லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 10, 2022, 5:55 PM IST

Updated : Aug 10, 2022, 6:38 PM IST

டெல்லி: தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என்.வி. ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆக. 26ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், அவருக்கு அடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை(யூயூ லலித்) நியமித்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இன்று (ஆக. 10) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,"இந்திய அரசியலமைப்பின் 124ஆவது சட்டப்பிரிவின் (2) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, வரும் ஆக.27 முதல் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, நீதிபதி உதய் உமேஷ் லலித்தை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளது. யூயூ லலித்தின் பதவிக்காலமும் வரும் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என தெரிகிறது.

இதையும் படிங்க:'குழந்தைகளால் முடியும்போது... நம்மால் முடியாதா...?' - உச்ச நீதிமன்ற நீதிபதி

Last Updated : Aug 10, 2022, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details