நாக்பூர்:மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் ரோஹித் தியோ. இவர் ஆகஸ்ட் 04ஆம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.ராஜினாமா செய்ததற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், தனது சுய மரியாதைக்கு எதிராக தன்னால் பணியாற்ற முடியாது என அவர் குறிப்பிட்டதாக நீதிமன்ற அறையில் இருந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக ரோஹித் தியோ பதவி வகித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம், மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக பணியமர்த்தப்பட்ட ரோஹித் தியோ, கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
2025-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் பணி ஓய்வு பெறவுள்ள நீதிபதி ரோஹித் தியோ, பல்வேறு முக்கிய வழக்குகளில் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளார். குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டில் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக, குற்றம் சாட்டப்பட்டிருந்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவரை விடுவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையும் படிங்க:Gyanvapi mosque case: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?