தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு - யு யு லலித்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்றுக்கொண்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திர சூட் பதிவியேற்பு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திர சூட் பதிவியேற்பு

By

Published : Nov 9, 2022, 10:27 AM IST

Updated : Nov 9, 2022, 11:25 AM IST

புதுடெல்லி: இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பதவியேற்றார். ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நேற்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை கடந்த மாதம் 11-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். அதன்படி உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் தற்போது பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 1959-ம் ஆண்டு நவம்பர் 11 அன்று பிறந்த நீதிபதி சந்திரசூட், 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அயோத்தி நிலப் பிரச்சனை, தனியுரிமை மற்றும் விபச்சாரத்திற்கான உரிமை, ஐபிசியின் 377வது பிரிவு நீக்கம், சபரிமலை விவகாரம், உள்ளிட்ட பல்வேறு அரசியல் சாசன அமர்வுகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளில் அவர் அங்கம் வகித்துள்ளார். .

இவரது தந்தை Y V சந்திரசூட் இந்தியாவின் மிக நீண்ட கால தலைமை நீதிபதியாக (CJI) பணியாற்றிய பெருமைக்குரியவர்.

இதையும் படிங்க:க்யூ எஸ் தர வரிசை பட்டியல்... முதல் 200 இடங்களுக்குள் 19 இந்தியப் பல்கலைக்கழகங்கள்

Last Updated : Nov 9, 2022, 11:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details