தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெகாசஸ் வலையில் நீதிபதி அருண் மிஸ்ரா! - ராகுல் காந்தி

பெகாசஸ் உளவு மென்பொருளால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் நீதிபதி அருண் மிஸ்ரா மொபைல் எண்ணும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Arun Mishra
Arun Mishra

By

Published : Aug 5, 2021, 10:15 PM IST

டெல்லி : ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவின் செல்போன் எண்ணும் பெகாசஸ் வேவு பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிபதி அருண் மிஸ்ரா கடந்தாண்டு (2020) செப்டம்பர் 3ஆம் தேதி ஒய்வு பெற்றார். இவர் பயன்படுத்திய செல்போன் எண் ஒன்றும் பெகாசஸ் வேவு பட்டியலில் இருந்துள்ளது.

இந்த எண்ணை நீதிபதி அருண் மிஸ்ரா 2014, ஏப்ரல் 21ஆம் தேதியை ஒப்படைத்து (சரண்டர்) விட்டார். நீதிபதி அருண் மிஸ்ரா தவிர தற்போது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற பதிவுத்துறை அலுவலர்கள் என்.கே காந்தி மற்றும் டிஐ ராஜ்புத் ஆகியோரின் மொபைல் எண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கிவருகின்றன.

பிரபல ஆங்கில இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இஸ்ரேலின் தனியாருக்கு சொந்தமான பெகாசஸ் உளவு மென்பொருள் வாயிலாக ஒன்றிய அமைச்சர்கள், நீதிபதிகள், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என 300 பேர் வேவு பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க : பெகாசஸ் விவகாரம்- அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details