தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - june 3 news today

ஜூன் 3, இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

news today
இன்றைய நிகழ்வுகள்

By

Published : Jun 3, 2021, 7:25 AM IST

Updated : Jun 3, 2021, 9:25 AM IST

1. முத்துவேலர் கருணாநிதி பிறந்த நாள்

கலைஞர் என மக்களால் அழைக்கப்படும் முத்துவேலர் கருணாநிதியின் பிறந்தநாள். இன்று. கரோனா பெருந்தொற்று காலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை தொண்டர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்து கொண்டாட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முத்துவேலர் கருணாநிதி பிறந்த நாள்

2. கரோனா நிவாரணம் இன்று இரண்டாம் தவணை

கரோனா நிவாரணநிதியாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன் படி கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டன. அதன் இரண்டாவது தவணைத் தொகை இன்று வழங்கப்படுகிறது.

கரோனா நிவாரணம்

3. தென்மேற்கு பருவ மழை தொடக்கம்

இந்த ஆண்டின் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் இன்று தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் முதல் தேதியில் தொடங்கும் மழை சற்று தாமதமாக இன்று தொடங்குகிறது.

தென்மேற்கு பருவ மழை தொடக்கம்

4. 7 திட்டங்களை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Last Updated : Jun 3, 2021, 9:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details