மேஷம்: உங்களை எதிர்கொண்டிருக்கும் பிரச்னைகளை சமாளிக்க சிறந்த முறையில் தயாராக உள்ளீர்கள். உங்களுடைய உற்சாகத்தை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது பலவற்றை திட்டமிடுவதைக் காட்டிலும், அதனை செய்வதற்கான ஒரு நேரம். இன்று உங்களால் மலைகளை தூக்கவும், சமுத்திரத்தைக் கடக்கவும் கூட இயலும். பிற்பாதியில் கொண்டாட்டங்களைச் செய்யலாம்.
ரிஷபம்:இந்த நாள் முழுவதும் மூன்று உணர்ச்சிகள் உங்கள் மனநிலையில் இருக்கும். சக்தி, களிப்பு, உற்சாகப் பிரவாகம். அத்தகைய உற்சாகம் எப்போதும் தொற்றிக் கொள்ளக் கூடியது. எனவே, உங்கள் அன்புக்குரியவர்களும், அருகாமையில் உள்ளவர்களும் அதனால் இன்புறுவார்கள். நாள் செல்லச் செல்ல நற்பலனும் அதிகரிக்கும். களைப்பாக உணர்ந்தால், வேலையிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்கவும்.
மிதுனம்: உங்களது தனிப்பட்ட வாழ்க்கை சில உயர்வுகளையும், தாழ்வுகளையும் சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மாலையில் கவனமும், அக்கறையும் கட்டாயமான தேவைகளாக இருக்கும். பணம் தொடர்பான விஷயத்தில் நீங்கள் இடர் ஏற்று செயல்படக்கூடும். சிந்தனையை அதிகம் செலுத்தாமல், நம்பிக்கையைக் காத்து அகமகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும்.
கடகம்: இந்த நாளில்உங்கள் செயல்பாடுகளை உள்ளத்தூண்டுதல் ஆக்கிரமிக்கும். நாளின் பிற்பகுதியில், எதிர்மறை விஷயங்களை புறந்தள்ளி நேர்மறை விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தவும். உங்கள் சிந்தனையைக் காட்டிலும் செயல்பாடே நல்விளைவை ஏற்படுத்தும். மெல்லிசையில் உங்கள் இதயத்தையும், புத்தியையும் லயிக்கச் செய்யுங்கள்.
சிம்மம்: உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கும். உங்கள் கடின முயற்சிகளுக்கு உரிய வெகுமதிகள் கிடைக்கும். அனைத்து சுபமான பணிகளையும் புதிய புராஜக்ட்களையும் மதியத்தில் தொடங்கவும். உங்கள் தாராள குணமும், இயலும் தன்மையும் உங்களை இன்று அமைதியாய் வைத்திருக்கும்.
கன்னி:அலுவலகத்தில் உங்களுக்கு தலைமையேற்கும் வாய்ப்பும், ஒரு திட்டத்தை முன்மொழியும் வாய்ப்பும் இன்று கிடைப்பதற்கான அறிகுறி தெரிகிறது. உங்களுடைய மதியம் வின்டோ ஷாப்பிங் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு பரிசு வாங்குவது என கழியும். நெருங்கிய நண்பர் அல்லது குடும்பத்தினருடன் நீண்ட கால இலக்குகளை திட்டமிடுவதில் மாலைப் பொழுது கழியும்.