ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வு காரணமாக குரேஸ் பள்ளத்தாக்கு (Gurez Valley) பகுதியில் உள்ள கட்டடங்கள் லேசான குலுங்கின. இதனால் அந்தப் பகுதி மக்கள் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
முன்னதாக ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லையில் காலை 9.45 மணிக்கு லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுக்கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.