ஜம்மு - காஷ்மீர்:யூனியன் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க விரைவில் ஹெலிகாப்டர் சேவைகளை அறிமுகப்படுத்த ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக அம்மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இத்திட்டம் குறித்து பேசிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் ஆலோசகர் பஷீர் அகமது கான், ”தால் ஏரி, அதனை ஒட்டிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் பறந்தபடி பார்வையிட விமான சஃபாரி பயணத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த நடவடிக்கை யூனியன் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும். அவர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவங்களை வழங்கும். முக்கியமான இடங்களுக்கிடையில் இணைப்பை உருவாக்குவதற்கும், அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் ஹெலிகாப்டர் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.