குண்டூர்(ஆந்திரப் பிரதேசம்):தக்கெல்லபடுவில் தனது காதலியை கழுத்தறுத்துப் படுகொலை செய்த காதலர், தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
தபஷ்வி எனும் மூன்றாம் ஆண்டு படிக்கும் பல் மருத்துவ மாணவி, தக்கெல்லப்படுவில் உள்ள தனது தோழியின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வருகை தந்த தபஷ்வியின் காதலர் கணேஷ்வர், அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் தபஷ்வியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தபஷ்வியின் தோழி அலறியடித்து வெளியே ஓடி வந்ததும், தபஷ்வியை மற்றொரு அறைக்கு கொண்டுசென்ற கணேஷ்வர் அந்த அறையை பூட்டியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சப்தம் கேட்டு விரைந்த அக்கம்பக்கத்தினர், அறைக் கதவை உடைத்து தபஷ்வியை மீட்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அப்போது தற்கொலைக்கு முயன்ற தபஷ்வியின் காதலர் கணேஷ்வரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.