ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் பகுதியில் உள்ள வீட்டில் திடீரென நுழைந்த நான்கைந்து மர்ம நபர்கள் தனியாக இருந்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை நோட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்ய மர்ம நபர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு இணங்காமல் பெண், கத்தி ஊரை கூட்டியதாக சொல்லப்படுகிறது.
கிராம மக்கள் வந்துவிட்டால் மாட்டிக் கொள்வோமோ என்ற பதற்றத்தில், பெண்ணைக் கட்டி வைத்த மர்ம நபர்கள், உடலில் தீ வைத்து எரிக்க முயன்றுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்த பெண்ணை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மற்றொரு மருத்துவமனைக்கு பெண் மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.