தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளம்பெண்ணை வன்புணர்வு செய்த இரு இளைஞர்களை உயிரோடு கொளுத்திய கிராம மக்கள்.. ஒருவர் பலி!

ஜார்க்கண்டில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இரு இளைஞர்களை கிராம மக்களே பிடித்து அடித்ததுடன், அவர்களை உயிருடன் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரு இளைஞர்களை உயிரோடு கொளுத்திய கிராம மக்கள்.. ஒருவர் பலி!
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரு இளைஞர்களை உயிரோடு கொளுத்திய கிராம மக்கள்.. ஒருவர் பலி!

By

Published : Jun 9, 2022, 7:51 PM IST

ஜார்க்கண்ட்மாநிலத்தில் உள்ல கும்லா மாவட்டத்தில் புதன் கிழமை (ஜூன் 8ஆம் தேதி) இளம்பெண் ஒருவரை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த பாதிப்பிற்கு உள்ளான பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் இளைஞர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்பு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும், இரு இளைஞர்களும் இருக்கும் இடத்தை அறிந்த கிராமத்தினர் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் இரு இளைஞர்களையும் உயிருடன் கொளுத்தியுள்ளனர். இதை அறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து இருவரையும் மீட்டு சிகிசைக்காக அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய கும்லாவின் துணை மண்டல காவல் துறை அலுவலர் மனிஷ் சந்திர லால், ”இரு இளைஞர்களில் ஒருவர் பலத்த தீக்காயத்தினால் உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் உயிருக்குப்போராடி வரும் நிலையில் இருக்கிறார். மேலும் கிராம மக்கள் இளைஞர்களின் இரு சக்கர வாகனத்தையும் கொளுத்தி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சதார் பகுதி காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட இருக்கிறார்’ எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு இரு இளைஞர்களை கிராம மக்கள் உயிருடன் கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:Pocso act: வீட்டு உரிமையாளரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - போலீஸ் வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details