சத்தீஸ்கர்: பதின்பருவ சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பானுபிரதாப்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பிரம்மானந்த் நேதமை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் விபசாரத்திற்கு உட்படுத்திய வழக்கில், பா.ஜ.க. பிரமுகர் பிரம்மானந்த் நேதம் உள்ளிட்டோர் மீது போலீசார் விசாரணை நடத்தினர்.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த பிரம்மானந்த் நேதம், தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறினார். பல கட்ட விசாரணைகளுக்கு பின் வழக்கில் பிரம்மானந்த் நேதத்திற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரிக்க ஜார்கண்ட் போலீசார், சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் நகருக்கு வந்தனர். இதனிடையே சத்தீஸ்கர் சட்டசபை பானுபிரதாப்பூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக பிரம்மானந்த் நேதமை பா.ஜ.க. அறிவித்தது.
வழக்கு தொடர்பாக நரேஷ் சோனி, பிரம்மானந்த் நேதம் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ உள்ளிட்ட வபழக்குகளை பதிவு செய்து, அவர்கள் தொடர்புடைய வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் விசாரணை குறித்து அறிந்ததும் பிரம்மானந்த் நேதம் உள்ளிட்டோர் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்...