தமிழ்நாடு

tamil nadu

ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட் தலைவர் கேரளாவில் கைதானது எப்படி?

By

Published : Apr 18, 2023, 7:27 PM IST

புலம்பெயர் தொழிலாளர்களிடம் மாவோயிஸ்ட் கருத்துகளைப் பரப்பி வந்த அந்த இயக்கத்தின் தலைவரை கேரளா போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

கோழிக்கோடு:ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டுவரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவரை கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், பந்தீரங்கவு போலீஸார் நேற்று (ஏப்.18) கைது செய்தனர்.

இந்திய மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தின் நிர்வாகியாக செயல்பட்டுவரும் ஓரோன் என்ற இளைஞரை பல நாட்களாக வலைவீசித் தேடி வந்த கேரளா மற்றும் ஜார்க்கண்ட் மாநில போலீசார் இணைந்து பந்தீரங்கவு பகுதியில் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஓரோன் ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் 11 மாதங்களாக சிறையில் இருந்துள்ளார். மேலும் முன்னதாக இவர், நான்கு முறை கேரளாவிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய உளவுத்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் கைதான மாவோயிஸ்ட் இயக்க தலைவரான ஓரோனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இவர் புலம்பெயர் தொழிலாளர்களின் மத்தியில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் கருத்துகளை பரப்பி வந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: துப்பாக்கி பயிற்சி விவகாரம்: நெல்லையில் தப்பியோடிய ரவுடியை டெல்லி போலீசார் தூக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details