தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாரணை வளையத்துக்குள் ஐஏஎஸ் பூஜா சிங்ஹால்! - சட்டவிரோத பணப்பரிமாற்றம்

ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அலுவலர் பூஜா சிங்ஹால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

Pooja Singhal
Pooja Singhal

By

Published : May 10, 2022, 6:47 PM IST

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறுவனத்தின் செயலாளராக இருந்தவர் ஐஏஎஸ் அலுவலரான பூஜா சின்ஹால். இவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தொடர்ந்து, ஐஏஎஸ் அலுவலர் பூஜா சிங்ஹாலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் பூஜா சிங்ஹால் இன்று (மே10) நேரில் ஆஜராகி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தற்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஐஏஎஸ் அலுவலர் என்று கூறப்படுகிறது.

மேலும் 2000ஆவது ஆண்டில் இருந்தே பூஜா மீது புகார்கள் வரத்தொடங்கின. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு சேர வேண்டிய ரூ.18கோடியில் முறைகேடுகள் நடந்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலர்கள் முன்னிலையில் பூஜா செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பவர் கட்டால் மாறிய மணமகள்... பதறிய பெற்றோர்!

ABOUT THE AUTHOR

...view details