தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

#வாழவிடு - கோவா முதலமைச்சருக்கு எதிராகப் பரப்புரை! - சாவந்த்

கோவா மாநிலத்தில் 'வாழு வாழ விடு' பரப்புரை அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த்துக்கு எதிராக தீவிரமெடுத்துள்ளது.

Goa
Goa

By

Published : Aug 3, 2021, 9:16 PM IST

Updated : Aug 3, 2021, 9:31 PM IST

பனாஜி : கோவாவில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு விவகாரத்தில் அரசாங்கத்திடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் பிரமோத் சாவந்தின் அறிக்கை பொறுப்பில்லாமல் அமைந்தது. முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை குற்றஞ்சாட்டினார்.

பிரமோத் சாவந்த் என்ன சொன்னார்?

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், “பெண்கள் ஏன் இவ்வளவு நேரம் வெளியே இருந்தார்கள், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பெற்றோரின் பொறுப்பாகும்” என்றார்.

முதலமைச்சரின் இந்த அறிக்கை சமூக வலைதளங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை அனைவராலும் கண்டிக்கப்படுகிறது. நிச்சயமாக, கோவாவின் சட்டம் ஒழுங்கு மற்றும் கோவா முதலமைச்சரின் அறிக்கையை அனைவரும் கூர்ந்து கவனித்துவருகின்றனர்.

முதலமைச்சர் பதவி விலக கோரிக்கை

கோவா பெனாலின் கடற்கரையில் சிறுமிகள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் எல்டன் டி கோஸ்டா, “நாங்கள் ஏன் வெளியே செல்ல பயப்பட வேண்டும்? கோவாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றவாளிகள் சிறையில் இருக்க வேண்டும், சட்டத்தை மதிக்கும் மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட வேண்டும்” என்றார்.

கோவா பார்வர்ட் கட்சி எம்எல்ஏ விஜய் சர்தேசாய், “முதலமைச்சரின் அறிக்கை பக்கச்சார்பானது என்று கூறினார். மேலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முதலமைச்சரின் கடமை. மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாவிட்டால், முதலமைச்சர் நாற்காலியில் உட்கார உரிமை இல்லை” என்றார்.

முன்னதாக பெனாலின் கடற்கரையில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த், “சம்பவத்தன்று 10 சிறுமிகள் கடற்கரை விருந்துக்கு சென்றுள்ளனர். அதில் 6 சிறுமிகள் வீடு திரும்பிய நிலையில் இரண்டு சிறுமிகள் தனது ஆண் நண்பர்களுடன் நீண்ட நேரம் கடற்கரையில் இருந்துள்ளனர்” என்றார்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை

முதலமைச்சரின் அறிக்கைக்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதலமைச்சர் வீடு முன்பு மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் பேசிய மகிளா காங்கிரஸ் தலைவி பினா நாயக், கோவா அமைதியை விரும்பும் மாநிலமாகும், ஆனால் மாநிலத்தில் பாஜக அரசு அமைக்கப்பட்டதில் இருந்து, கோவாவில் அச்சத்தின் சூழல் நிலவுகிறது. மாநிலத்தில் குற்றவாளிகள் அச்சமற்றவர்கள், பெண்களுக்கு எதிரான கொலைகள் உள்ளிட்ட கொடிய குற்றங்கள் கூட கட்டுப்படுத்தப்படவில்லை” என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் கட்சி பிரமுகர் அனுராதா கவாடே கூறுகையில், கோவாவில் ஒரு வாரத்தில் சராசரியாக பெண்களுக்கு எதிரான 4 வழக்குகள் பதிவாகின்றன. கோவாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்று கேள்வியெழுப்பினார்.

வேலைக்கு செல்லும் பெண்கள் கேள்வி

வேலை செய்யும் பெண்களும் கோவாவின் சட்டம் ஒழுங்கு மற்றும் முதலமைச்சரின் அறிக்கை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

#வாழுவாழவிடு - கோவா முதலமைச்சருக்கு எதிராகப் பரப்புரை!

கோவாவின் பிரதிபா போர்கர் முதலமைச்சரின் அறிக்கையை கண்டித்து, குற்றவாளிகள் சட்டத்தை பார்த்து பயம்கொள்ள வேண்டும், கோவாவில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு முதலமைச்சருக்கு உள்ளது என்று கூறினார். மேலும், இது அவர்களின் தார்மீக பொறுப்பு என்றும் கூறினார்.

கோவா சுற்றுலா பயணிகள் கருத்து?

கோவா நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள்.

இதில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்களும் உள்ளனர். கோவா கடற்கரையில் மைனர் சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், பின்னர் முதலமைச்சரின் அறிக்கையின் மீதும் சுற்றுலா பயணிகள் மத்தியில் கோபம் உள்ளது.

மாநிலத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் அவர்கள் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள். கோவாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை மிகப்பெரிய பிரச்சினையாக கருதுகின்றனர்.

அவர்களை பொறுத்தவரை, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பு. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க. சட்டம் ஒழுங்கு நிலைமை நன்றாக இருந்தால், கோவாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி நடமாட முடியும்.

இதையும் படிங்க : கேவா சிறுமிகள் வன்புணர்வு- பொறுப்பில்லாமல் பேசிய பிரமோத் சாவந்த்!

Last Updated : Aug 3, 2021, 9:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details