சென்னை: ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் இன்று (செப்-11) வெளியிடப்பட்டுள்ளது. 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில் 40,712 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 34 ஆயிரத்து 196 மாணவர்களும், 6,516 மாணவிகளும் அடங்கும். இந்திய அளவில் மும்பை மண்டலத்திற்குட்பட்ட ஆ.ர்.கே சிசிர் என்ற மாணவன் 360 மதிப்பெண்களுக்கு 314 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், டெல்லியை சேர்ந்த தனிஷ்கா காப்ரா என்ற மாணவி 277 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது - 1 5 lakh candidates had appeared for the exam
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் 40,712 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
சென்னை மண்டலத்தில் பவுல் லட்சுமி சாய் லோகித் ரெட்டி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐஎமில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக மெயின், அட்வான்ஸ்என்று நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுத தகுதிப் பெறுவார்கள். இதுமட்டுமல்லாமல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிங்க:நீட் தேர்வில் வெற்றிபெற்ற 4 பழங்குடியின மாணவர்கள்