டெல்லி: நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அடுத்த 24 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் சந்திர யாதவ், “பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “2005ஆம் ஆண்டு முதல் பிகாரின் வளர்ச்சிக்காக முதல் அமைச்சர் நிதிஷ் குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். மாநிலத்தின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் மற்றும் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் இன்னும் வேகமெடுக்க பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவை. அவ்வாறு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் அதன் வளர்ச்சி பன்மடங்கு வேகமெடுக்கும். அரசாங்க திட்டங்களில், 90 சதவீத தொகையை மத்திய அரசு செலுத்தும், மீதமுள்ள 10 சதவீதம் பிகார் அரசிடமிருந்து வழங்கப்படும். எனவே இங்கு சேமிக்கப்படும் பணம் பிகார் மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்” என்றார்.
பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை! தொடர்ந்து பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை பாஜகவினர் சிலர் எதிர்க்கின்றரே என்ற கேள்விக்கு, “அவர்கள் பிகாரிகள் இல்லையென நான் நினைக்கிறேன். இதைச் சொல்ல எனக்கு வேதனையாக உள்ளது” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க : நீட் வெற்றி: 7.5% இட ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை!