தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

1 வாங்கினா இன்னொன்னு ப்ரீ! ஜவான் படக் குழு கொடுத்த அதிரடி ஆபர்! - makers of film Jawan

Jawan movie ticket buy 1 get 1 offer: பிளாக்பஸ்டர் அடித்து உள்ள ஜவான் திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே பல சாதனைகளை முறியடித்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு அதிரடி ஆபர் ஒன்றை அறிவித்து உள்ளனர்.

ஜவான் படத்துக்கு அதிரடி ஆஃபர்: டிக்கெட் 1 வாங்கினால் மற்றொன்று இலவசம்!
ஜவான் படத்துக்கு அதிரடி ஆஃபர்: டிக்கெட் 1 வாங்கினால் மற்றொன்று இலவசம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 10:56 AM IST

மும்பை: பாலிவுட்டின் பாட்ஷாவான ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் விதமாக, அடுத்த 3 நாட்களுக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம் என ரசிகர்களுக்கு அதிரடி ஆபரை வழங்கி உள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள்.

ஜவான் படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான நிலையில், வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபிசில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த மகிழ்ச்சிக்கு மத்தியில், தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளனர். இன்று (செப். 28) முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஜவான் பட டிக்கெட்டை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Chandramukhi 2: பழனி கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்!

இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இந்த ஆபர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அதிரடி ஆபரால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர். இந்த வாய்ப்பை அறிவித்த ஷாருக் தன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், "சூப்பர்ஹிட் படத்திற்கு சூப்பர்ஹிட் ஆபர். ஒன்று வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம். சகோதரனுக்கு, சகோதரிக்கு.. எதிரிக்கு, நண்பருக்கு.. ஆம், உங்கள் அன்புக்கு.. நாளை உங்களை இளமையாகக் காட்டுவேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

'ஜவான்' படம் வெளியான 19 நாட்களிலேயே உலகம் முழுவதும் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும், உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ஜவான் ரூ.600 கோடியை தொடப்போகிறது. ஷாருக் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா, ரித்தி டோக்ரா, சுனில் குரோவர் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகை தீபிகா இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து உள்ளார்.

இதையும் படிங்க: நாளை வருகிறார் 'Leo Dass'... விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்!

ABOUT THE AUTHOR

...view details