ஐதராபாத் :நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் சினிமாவின் வசூல் மன்னன் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ் குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். படம் வெளியாவதற்கு முன்பாகவே ‘காவாலா’, ஹுக்கும் ஆகிய பாடல்கள் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பரவி, வைரலாகி ரசிகர்களிடம் படத்தின் மீதா எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
இந்த படம் வெளியானது முதல் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்று வருகிறது. ஜெயிலர் படம் வெளியாகி ஒரு வார காலம் ஆன நிலையில் இன்னும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்ட். 16) மட்டும் இந்திய அளவில் ஜெயிலர் திரைப்படம் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வார வேலை நாட்களில் சாதாரணமாக ஒரு திரைப்படத்திற்கு கிடைக்கும் வசூலை விட அதிகம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Jailer வெற்றிக்காக பரிசளிக்கும் ரஜினிகாந்த்.! இமயமலையிலிருந்து வந்த இன்ப அதிர்ச்சி..!