புது டெல்லி: ஏப்.16ஆம் தேதி ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரியில் வன்முறை வெடித்தது.
ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது சிலர் மறைந்திருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜஹாங்கீர்புரி வன்முறையில் ஈடுபட்டத்தில் முக்கிய குற்றவாளி அன்சார் பாஜக பிரமுகர் என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து புகைப்பட ஆதாரங்களை ட்விட்டரில் பகிர்ந்து ஆம் ஆத்மி பிரமுகர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.